/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த பேரம்பாக்கம் சாலை
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த பேரம்பாக்கம் சாலை
ADDED : டிச 18, 2024 12:18 AM

பேரம்பாக்கம், :கடம்பத்துார் ஒன்றியத்தில், முதல்நிலை ஊராட்சியான, பேரம்பாக்கம் ஊராட்சியில் உள்ளது பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தை , சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாகி ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையாக மாறியுள்ளதால், பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், பேருந்து நிலையம் வழியாக தான் இப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பேருந்து நிலையம் செல்லும் நெடுஞ்சாலையை சீரமைத்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.