/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையம் சாலை அகலப்படுத்தும் பணியில் குளறுபடி; கலெக்டர் 'டென்ஷன்'
/
பெரியபாளையம் சாலை அகலப்படுத்தும் பணியில் குளறுபடி; கலெக்டர் 'டென்ஷன்'
பெரியபாளையம் சாலை அகலப்படுத்தும் பணியில் குளறுபடி; கலெக்டர் 'டென்ஷன்'
பெரியபாளையம் சாலை அகலப்படுத்தும் பணியில் குளறுபடி; கலெக்டர் 'டென்ஷன்'
ADDED : அக் 04, 2024 08:37 PM
திருவள்ளூர்:திருநின்றவூர் - பெரியபாளையம் அகலப்படுத்தும் பணியில் குளறுபடி இருப்பதால், அரசு வழிகாட்டுதல்படி தரமாக அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையை, 111 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் மார்க்கமாக, 13.12 அடி அகலத்துக்கு மழைநீர் வடிகால் மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு துவக்கப்பட்டது.
ஏற்கனவே, பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலை, 23 அடி சாலையாக இருந்தது. தற்போது, விரிவாக்கம் செய்யும் நான்கு வழிச்சாலை, இரு மார்க்கத்திலும், தலா 49.21 அடி சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், சாலையின் தரம் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இம்மனு மீது அதிகாரிகளிடம், கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலை அமைப்பதில் நிறைய குளறுபடிகள் உள்ளன. புதிதாக அமைக்கப்படும் சாலை, ஏதோ பழைய சாலையை புதுப்பிப்பது போல், ஆங்காங்கே 'பேட்ச் ஒர்க்' செய்யப்படுகிறது.
பல இடங்களில் சாலையின் இரு பக்கங்களிலும் 10 அடிக்கு அதிகமாக பள்ளங்கள் உள்ளன. ஒரு சில இடங்களில், சாலை நடுவே பல இடங்களில் தடுப்புகள் இல்லாமல் அமைக்கப்படுகிறது.
அந்த தடுப்புகளும், தரம் இல்லாமல் உடைந்து காணப்படுகிறது. எனவே, சாலையை 5-50 அடி அகலத்தில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.