/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெருமாநல்லுார் சாலை சீரமைப்பு பணி மந்தம்
/
பெருமாநல்லுார் சாலை சீரமைப்பு பணி மந்தம்
ADDED : மார் 17, 2024 12:42 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், பெருமாநல்லுார் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரில் படிக்கும் மாணவர்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க மேலப்பூடி நடுநிலை பள்ளி மற்றும் சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்கின்றனர்.
இதற்காக, பெருமாநல்லுாரில் இருந்து மேலப்பூடி வழியாக செல்லும் தார்ச்சாலையில் பயணித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இந்த சாலையை சீரமைக்கும் பணி துவங்கியது. ஜல்லிக்கற்களை பெயர்த்து சமன் செய்யப்பட்டதுடன், சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், இந்த வழியாக யாரும் நடந்து செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வழியாக வயல் வெளிக்கு செல்லும் மாட்டு வண்டிகளில் பயணித்து பள்ளிக்கு செல்கின்றனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, மாட்டு வண்டிகள் வரும் வரை காத்திருக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி, சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

