/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிரை தாக்கும் பூச்சி வேளாண் துறை விளக்கம்
/
நெற்பயிரை தாக்கும் பூச்சி வேளாண் துறை விளக்கம்
ADDED : ஜூன் 16, 2025 11:34 PM

திருத்தணி, திருத்தணி தாலுகாவில் உள்ள 74 வருவாய் கிராமத்தில், பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அதிகளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
நெற்பயிரை தாக்கும் பூச்சிக்கொல்லிகள் குறித்து, வேளாண் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருத்தணி அடுத்த குன்னத்துார் கிராமத்தில், பேயர் நிறுவனத்தின் சார்பில் புதிய பூச்சிக்கொல்லி 'குருணை பிகோட்டா' வயல் விழா நடந்தது.
இதில், நெற்பயிரை தாக்கும் தண்டு துளைப்பான் தாக்குதல் மற்றும் பாதிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும், பேயர் நிறுவனத்தின் புதிய பூச்சிக்கொல்லியான, 'குருணை பிகோட்டா' வாயிலாக ஏற்படும் நன்மைகள் மற்றும் மகசூல் அதிகரிப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.