sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'லிப்ட்' கேட்டு மனு

/

திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'லிப்ட்' கேட்டு மனு

திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'லிப்ட்' கேட்டு மனு

திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'லிப்ட்' கேட்டு மனு


ADDED : டிச 17, 2024 09:55 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, 'லிப்ட்' அமைக்க வேண்டும் என கேட்டு மனு அளிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர், சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் பயணித்து வருகின்றனர். இவ்வழியாக, தினமும், 170 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள், 3வது நடைமேடையிலும், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்கள், 4 மற்றும் 5வது நடைமேடையிலும், நின்று செல்கின்றன.

இந்த நடைமேடைகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், மேம்பாலத்தில் ஏற முடியாமல், ஆபத்தான முறையில், ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.

தற்போது, 2 மற்றும் 3வது நடைமேடையில் மட்டும், 'எஸ்கலேட்டர்' வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, முதல் மற்றும் ஆறாவது நடைமேடையில், 'லிப்ட்' ஏற்படுத்த வேண்டும். மேலும், 4 மற்றும் 5வது நடைமேடையில், 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டும்.

இதன் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us