/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரி மனு
/
நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரி மனு
ADDED : ஜூலை 12, 2025 09:02 PM
திருத்தணி:
திருத்தணி கோட்ட விவசாயிகள் ஏரிகள் மதகு மற்றும் நீர்பாசன கால்வாய்களை சீரமைத்து தரவேண்டும் என, ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
திருத்தணி வருவாய் கோட்ட விவசாயிகள், 10க்கும் மேற்பட்டோர், நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, ஆர்.டி.ஓ., கனிமொழியிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மனுவில் வருவாய் கோட்டத்தில் உள்ள பல ஏரிகளின் மதகுகள், நீர்ப்பாசன கால்வாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.
நீர்வளத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே, மதகு, நீர்ப்பாசன கால்வாய்களை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., 'உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.