/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆவடி கமிஷனரிடம் மனு
/
பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆவடி கமிஷனரிடம் மனு
பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆவடி கமிஷனரிடம் மனு
பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆவடி கமிஷனரிடம் மனு
ADDED : நவ 27, 2025 03:24 AM
பொன்னேரி: பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி கமிஷனரிடம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத் தினர் மனு அளித்தனர்.
பொன்னேரி அரிஅரன் பஜார் சாலை, புதிய பேருந்து நிலைய சாலையில், 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சாலையோரங்களில் உள்ள வணிகர்கள், விற் பனை பொருட்களை காட்சி படுத்துவதற்காகவும், உணவகங்களின் சமையல் கூடங்களை அமைக்கவும், கட்டடங்களின் முன் கூரை அமைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.
சாலையோர சிறு வியாபாரிகளும், ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபடு கின்றனர். மேற்கண்ட இரு சாலைகளிலும், வாகன போக்குவரத்து அதிகரித் துள்ளது. சாலை ஆக்கிர மிப்புகளால் போக்கு வரத்து இடையூறு ஏற்பட்டு, வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத்தினர், நேற்று ஆவடி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் போதிய இடவசதி இருந்தும் சாலையை ஆக்கிரமித்து, தேவையற்ற பொருட்களை வைத்துள்ளதால், சாலையின் அகலம் சுருங்கி வருகிறது.
இதனால், போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, போக்கு வரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

