/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டுமனை கேட்டு பீரகுப்பம் பெண்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
/
வீட்டுமனை கேட்டு பீரகுப்பம் பெண்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
வீட்டுமனை கேட்டு பீரகுப்பம் பெண்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
வீட்டுமனை கேட்டு பீரகுப்பம் பெண்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : ஜன 05, 2025 02:07 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த, பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில், நேற்று காலை, திருத்தணி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சந்திரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த, ஐந்து குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.
பின், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது, பீரகுப்பம் அருந்ததி காலனி பெண்கள், 70க்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ., சந்திரனிடம், எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகிறோம்.
எங்களுக்கு பட்டா வழங்குவதற்காக போதிய அரசு நிலமும் உள்ளது. ஆனால், வருவாய் துறையினர் இலவச வீட்டுமனை வழங்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர்.
எனவே, எங்களுக்கு வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என, பெண்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, பெண்களிடம் இருந்து, எம்.எல்.ஏ., கோரிக்கை மனு பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
மேலும், அங்கிருந்து, கலெக்டர் பிரபுசங்கரிடம் மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

