/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் சுற்றுச்சுவர் பணிக்கு இடையூறு பொன்னேரி ஆர்.டி.ஓ.,விடம் மனு
/
கோவில் சுற்றுச்சுவர் பணிக்கு இடையூறு பொன்னேரி ஆர்.டி.ஓ.,விடம் மனு
கோவில் சுற்றுச்சுவர் பணிக்கு இடையூறு பொன்னேரி ஆர்.டி.ஓ.,விடம் மனு
கோவில் சுற்றுச்சுவர் பணிக்கு இடையூறு பொன்னேரி ஆர்.டி.ஓ.,விடம் மனு
ADDED : ஏப் 23, 2025 02:41 AM
பொன்னேரி, மீஞ்சூர், பக்தவச்சலம் தெருவில், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த குளக்கரை வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கோவில் வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு, பகுதிவாசிகள் சிலர் இடையூறு செய்வதாக கூறி, நேற்று குளக்கரை வரசித்தி விநாயகர் கோவில் திருப்பணி குழு சார்பில், பொன்னேரி ஆர்.டி.ஓ., கனிமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவிலின் பாதுகாப்பு கருதியும், பகுதிவாசிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வழிபாடு செய்வதற்கும் ஏற்ப சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. லால்பகதுார் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அப்பகுதிவாசிகளுக்கு நான்கு புறங்களிலும் சாலை வசதி உள்ளது. கோவில் வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. குப்பை கழிவுகள் கோவில் வளாகத்தில் கொட்டப்படுகின்றன.
இச்செயல்களை தடுக்கவே சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி, லால்பகதுார் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தோர், மேற்கண்ட கோவில் அருகில் உள்ள சாலையின் ஒரு பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவில் திருப்பணிக்குழு சார்பிலும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு புகார் குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

