/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீனவருக்கு பஞ்சப்படி கலெக்டருக்கு மனு
/
மீனவருக்கு பஞ்சப்படி கலெக்டருக்கு மனு
ADDED : ஜன 27, 2025 11:29 PM
திருவள்ளூர், ஏவுகணை செலுத்தும் காலத்தில், கடலுக்கு செல்லாத மீனவர் குடும்பத்தினருக்கு, பஞ்சப்படி வழங்க வேண்டும் என, மனு அளிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு, லைட்அவுஸ் குப்பம் மீனவர்கள் சார்பில், கலெக்டரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனு:
பொன்னேரி வட்டம், பழவேற்காடு அடுத்த, லைட்அவுஸ் குப்பம் ஊராட்சியில், 15 மீன்பிடி கிராமங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சமீப காலமாக, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த சமயத்தில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தி வருகிறது. 10,000 குடும்பத்தினரும், மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால், வறுமையில் சிக்கி தவிக்கின்றனர்.
கடந்த 1980ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவுகணை செலுத்தும்போது, கிராமங்களுக்கு குடும்ப உறுப்பினர் அடிப்படையில் பஞ்சப்படி வழங்கப்பட்டது. தற்போது, இந்த பஞ்சப்படி வழங்கப்படுவதில்லை.
எனவே, ஏவுகணை செலுத்தும் சமயத்தில், மீனவ குடும்பத்தினருக்கு பஞ்சப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

