/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடற்புழு நீக்க நாள் மாணவர்களுக்கு மாத்திரை
/
குடற்புழு நீக்க நாள் மாணவர்களுக்கு மாத்திரை
ADDED : பிப் 11, 2025 12:12 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரையை, கலெக்டர் பிரதாப் வழங்கினார்.
பின் அவர் கூறியதாவது:
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனமின்மை, ரத்த சோகை, குமட்டல், வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்பு உருவாகிறது.
இதை களைய, திருவள்ளூர் மாவட்டத்தில், குடற்புழு நீக்கத்திற்காக 'அல்பெண்டசோல்' மாத்திரை அனைத்து அங்கன்வாடி, பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.
மாவட்டம் முழுதும், 7,75,834 குழந்தைகள், 2,67,391 பெண்கள் ஆகியோருக்கு, 3,740 மையங்களில் வழங்கப்படும். இதற்காக, ஆசிரியர், அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர் 4322 பேர் வாயிலாக வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 17ல் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, வட்டார மருத்துவர் சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

