/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நெடுஞ்சாலை விரிவாக்கம் 10 மாதத்திற்குள் பணி முடிக்க திட்டம்
/
திருத்தணி நெடுஞ்சாலை விரிவாக்கம் 10 மாதத்திற்குள் பணி முடிக்க திட்டம்
திருத்தணி நெடுஞ்சாலை விரிவாக்கம் 10 மாதத்திற்குள் பணி முடிக்க திட்டம்
திருத்தணி நெடுஞ்சாலை விரிவாக்கம் 10 மாதத்திற்குள் பணி முடிக்க திட்டம்
ADDED : பிப் 11, 2025 12:14 AM

திருத்தணி,திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். குறிப்பாக, அதிகாலை 4:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை அதிகளவில் வாகனங்கள் சென்று வரும். இதில், கனரக வாகனங்களும் அடங்கும்.
நான்குவழிச் சாலை
இந்நிலையில், நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக உள்ளதால், போக்கு வரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகளவில் நடந்து வருகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் இச்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து, திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், திருத்தணி முதல், ஆர்.கே.பேட்டை வரை, 23 கி.மீட்டர் துாரம் நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்கு, 120 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிதியுதவி கோரியது.
முதற்கட்டமாக, திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் முதல், பீரகுப்பம் வரை, நான்கு கி.மீ., துாரம் இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டது.
இப்பணிகளை நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
ஏழு சிறுபாலங்கள்
இதுகுறித்து திருத்தணி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ரகுராமன் கூறியதாவது:
தலையாறிதாங்கல் முதல், பீரகுப்பம் வரை நான்குவழிச் சாலை பணிகள் இன்று துவங்கி, பத்து மாதத்திற்குள் முடித்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
சாலையோரம் உள்ள 351 மரங்கள் அகற்றப்பட்டும், பழைய ஏழு சிறுபாலங்கள் விரிவாக்கம், இரண்டு புதிய சிறுபாலங்கள் அமைக்கப்படும். நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் நடந்து செல்வதற்கும், தனித்தனி வழியாக ஏற்படுத்தப்படும்.
இதுபோன்று படிப்படியாக, சித்துார் - திருத்தணி நெடுஞ்சாலையில், திருத்தணி முதல், ஆர்.கே.பேட்டை வரை இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.