/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
/
திருத்தணி கோவிலில் பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
ADDED : ஜன 03, 2025 10:39 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், தமிழக அரசால் தடைசெய்யப் பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர், டம்பளர் போன்றவை அதிகளவில் விற்பனை மற்றும் கடைக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து நேற்று திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் முருகன் மலைக்கோவிலில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மலைக்கோவிலில் பிரசாத கடை, பூஜை பொருள் விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல்களில் அரசால் தடை செய்யப்பட்ட, 9 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், 1,900 ரூபாய் அபராதம் விதித்தும், தொடர்ந்து பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்வதும், பயன்படுத்துவது தெரிந்தால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

