/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.எம்., கிசான் விவசாயிகள் இ-கே.ஒய்.சி., பதிவு கட்டாயம்
/
பி.எம்., கிசான் விவசாயிகள் இ-கே.ஒய்.சி., பதிவு கட்டாயம்
பி.எம்., கிசான் விவசாயிகள் இ-கே.ஒய்.சி., பதிவு கட்டாயம்
பி.எம்., கிசான் விவசாயிகள் இ-கே.ஒய்.சி., பதிவு கட்டாயம்
ADDED : அக் 15, 2024 08:04 PM
திருவள்ளூர்:பிரதமர் கிசான் விவசாய பயனாளிகளுக்கு, இ---கே.ஒய்.சி., கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. மூன்று தவணையாக இந்த உதவி தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை, இத்திட்டத்தின் கீழ், 18 தவணை உதவி தொகை, தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உதவித் தொகை பெறுவதற்கு விவசாய பயனாளிகள் அனைவரும், இ-- - கே.ஒய்.சி., கட்டாயம் செய்திருக்க வேண்டும். இதனை, 'pmkisan.gov.in' என்ற இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டும், இதனை பதிவேற்றம் செய்திடலாம். வரும், 25க்குள் விவசாயிகள் தங்களின் இ- - கே.ஒய்.சி.,யை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.