பிரதமர் மேற்படிப்பு கல்வி உதவி திட்டம்: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
பிரதமர் மேற்படிப்பு கல்வி உதவி திட்டம்: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : செப் 22, 2026 08:10 PM
ADDED : செப் 22, 2026 05:23 PM
திருவள்ளூர்:பிரதமர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கவிதா அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு இடஒக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, 2026 - -27ம் ஆண்டிற்கான, பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதன்படி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் அக்., 21க்குள், தங்கள் கல்லுாரி ஒருங்கிணைப்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல் பெற, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
