சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2026 05:55 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டித்து, பா.ம.க .,வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
பெரும்பாலான தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையை சேர்ந்தவை.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் தொழிற்சாலைகளால், கும்மிடிப்பூண்டி பகுதியின் நீர், நிலம் மற்றும் மக்கள் சுவாசிக்கும் காற்றில் அதிகளவில் மாசு கலந்து வருகிறது.
இதனால், பகுதி மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து நேற்று, பா.ம.க.,வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் சங்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் ரவிராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப் பாட்டத்தின் போது, தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு கள், மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், சிப்காட் நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சிய போக்கு ஆகியவற்றை கண்டித்து பேசினர்.
