/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவியிடம் அத்துமீறல் வாலிபருக்கு 'போக்சோ'
/
மாணவியிடம் அத்துமீறல் வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : ஜூலை 05, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர், 'போக்சோ' சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.
திருத்தணி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். திருத்தணியைச் சேர்ந்த விக்னேஷ், 23, என்பவர், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, சில நாட்களுக்கு முன், வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். நேற்று விக்னேஷை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

