/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 'போக்சோ'
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 'போக்சோ'
ADDED : ஜன 22, 2025 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த, அரும்பாக்கம் காலனியில் வசித்து வருபவர் சிவா, 40; இவரது மனைவி கலையரசி, 36; இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் மனைவி வினோதினி, 27.
இவர், கலையரசியின், 17 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கலையரசி, பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், வினோதினியை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

