/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'போக்சோ'
/
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : அக் 08, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவாலங்காடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருவாலங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர், திருத்தணி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நலம் சரியில்லாததால், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு, பெண் மருத்துவர் சிறுமியை பரிசோதனை செய்த போது, 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி, திருத்தணி மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.