UPDATED : அக் 11, 2026 08:22 PM
ADDED : அக் 11, 2026 08:16 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 38. விவசாயி. இவர், சில மாதங்களாக வயிற்று பிரச்னையால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மனமுடைந்த பூபாலன், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
