/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
/
போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 17, 2024 11:12 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், போதைப்பொருள் விற்பனையை தடுக்க, பொதுமக்கள் கூடும் இடங்களில், விழிப்புணர்வு பதாகை அமைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், சட்டவிரோத மதுபானத்தையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கும் வகையில், தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுதும், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், போலீசார் விழிப்புணர்வு பதாகை அமைத்துள்ளனர்.
அந்த பதாகையில், ''போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்'' சட்டவிரோதமான மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க இணைந்து போராடுவோம்.
இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581, வாட்ஸாப் எண்: 94984 10581; திருவள்ளூர் மாவட்ட வாட்ஸாப் எண்; 63799 04848. இதில் சரியான தகவல் அளிப்பவர்களுக்கு, வெகுமதி தரப்படும். தகவல் அளிப்போர் ரகசியம் காக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.