/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனை அருகில் வாகனம் நிறுத்த போலீசார் தடை
/
அரசு மருத்துவமனை அருகில் வாகனம் நிறுத்த போலீசார் தடை
அரசு மருத்துவமனை அருகில் வாகனம் நிறுத்த போலீசார் தடை
அரசு மருத்துவமனை அருகில் வாகனம் நிறுத்த போலீசார் தடை
ADDED : டிச 04, 2024 01:47 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சுவர் அருகில் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் அமைந்துள்ளது. இங்கு, புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு, இதய நோய் மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட, பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும், 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
மகப்பேறு மற்றும் உள்நோயாளிகள் என, 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விபத்து, மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சை பெறுவேறுக்காக, ஆம்புலன்ஸ் வாகனங்கள், தினமும் வந்து செல்கின்றன.
மருத்துவமனை வளாகத்தின் முன், ஜே.என்.சாலையில், 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களும், நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
இதையடுத்து, அரசு மருத்துவமனை சுவர் அருகில் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல்துறை எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இருப்பினும், இதை கண்டு கொள்ளாமல், ஆட்டோக்களும், தனியார் ஆம்புலன்ஸ்களும் மருத்துவமனை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.