/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை கணவரை சுத்தியால் தாக்கிய மனைவியிடம் போலீஸ் விசாரணை
/
போதை கணவரை சுத்தியால் தாக்கிய மனைவியிடம் போலீஸ் விசாரணை
போதை கணவரை சுத்தியால் தாக்கிய மனைவியிடம் போலீஸ் விசாரணை
போதை கணவரை சுத்தியால் தாக்கிய மனைவியிடம் போலீஸ் விசாரணை
ADDED : செப் 27, 2024 08:09 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த பம்மதுகுளம், காட்டுநாயக்கன் நகரைச் சேர்ந்தவர் கருணாகரன், 39; ஆட்டோ டிவைர். இவரது மனைவி சரஸ்வதி, 35; தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மது போதைக்கு அடிமையான கருணாகரன், தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்வதும், அவர்களை துன்புறுத்தி வந்தார்.
நேற்று கருணாகரன், போதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிட்டு, வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டையை தடுத்த மகளை தாக்கியுள்ளார்.
பின், எட்டு வயது மகனுக்கு மதுவை வற்புறுத்தி குடிக்க வைக்க முயன்றார். போதை கணவரின் செயல்களை சரஸ்வதி கண்டித்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டடத்தில் கணவன் மீது கோபம் அடைந்த சரஸ்வதி வீட்டில் இருந்த சிறிய சுத்தியலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.
இதில், பலத்த காயமடைந்த கருணாகரன், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதுகுறித்து சரஸ்வதி, சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கருணாகரனை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, சோழவரம் போலீசார் சரஸ்வதியிடம் விசாரித்து வருகின்றனர்.