தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தடுப்புச்சுவர் இல்லாத குளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 தடுப்புச்சுவர் இல்லாத குளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 தடுப்புச்சுவர் இல்லாத குளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : ஜன 25, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே தடுப்புச் சுவர் அமைக்கப்படாமல் உள்ள குளத்தால், பள்ளி மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த நல்லுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ--------------- - -மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி அருகே உள்ள கோவில் குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.

மாலை பள்ளி முடிந்து அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவியர் குளத்தில் இறங்கி நீச்சல் அடித்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து, வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ - மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us