/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபாடு
/
அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபாடு
ADDED : ஜூலை 27, 2025 09:07 PM
திருத்தணி:ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
திருத்தணியில் தணிகாசலம்மன் கோவில், தணிகை மீனாட்சி அம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் கோவில், குமாரகுப்பம் கன்னியம்மன் கோவில், அகூர் தீபார்த்தியம்மன் கோவில் உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று, ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை ஒட்டி திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
முன்னதாக, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், அம்மன் கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மக்கள் செய்தி ருந்தனர்.