/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டையில் பெண்கள் குழுவாக கொண்டாடிய பொங்கல்
/
ஆர்.கே.பேட்டையில் பெண்கள் குழுவாக கொண்டாடிய பொங்கல்
ஆர்.கே.பேட்டையில் பெண்கள் குழுவாக கொண்டாடிய பொங்கல்
ஆர்.கே.பேட்டையில் பெண்கள் குழுவாக கொண்டாடிய பொங்கல்
ADDED : ஜன 15, 2025 11:43 PM

ஆர்.கே.பேட்டை, பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் இணைந்து கூட்டு குடும்பமாக வீடுகளில் கொண்டாடுவது உண்டு. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், ஒரே தெருவில் வசிக்கும் பெண்கள், பொங்கல் பண்டிகையை குழுவாக இணைந்து தெருவில் கொண்டாடும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீகாளிகாபுரத்தில் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை ஒட்டி, இரண்டு நாட்களாக, ஒரே தெருவில் வசிக்கும் பெண்கள் ஒரே விதமான சேலைகளை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தெருவில் தோரணங்களை கட்டி அலங்கரிப்பது, பூஜைக்கு தேவையான பொருட்களை சேகரிப்பது,கோலம் இடுவது, பொங்கல் வைப்பது என, அனைவரும் சேர்ந்து கொண்டாடினர்.
பள்ளி, கல்லுாரி மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தற்போது பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, கடைசி வேலை நாளில் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இல்லதரசிகளும் தற்போது பொங்கல் பண்டிகையை இணைந்து கொண்டாடும் வழக்கத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

