/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு
/
அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு
அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு
அங்காளம்மன், எல்லையம்மன் கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வு
ADDED : ஏப் 11, 2025 02:21 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் நேற்று நடந்த ஜாத்திரை விழா கடந்த, 6ம் தேதி கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் அங்காளம்மன், எல்லையம்மன் ஆகிய கோவில்களில் பொங்கல் வைப்பு நிகழ்வுடன் துவங்கியது.
பின்னர், 7,8, 9 ஆகிய தேதிகளில் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஊர் முழுவதும் சுற்றி எடுத்து வரப்பட்டது. அன்றைய தினம் இரவு, 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது அப்போது பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு, படையல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு ரெட்டித் தெருவில் இருந்து பெண்கள் விளக்கேந்தி, படையல் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஊர் பெரியவர் கிளியாம்பாள்திருத்தணி தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தினர்.