தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பொன்னேரி நகராட்சி கூட்டம்

பொன்னேரி நகராட்சி கூட்டம்

பொன்னேரி நகராட்சி கூட்டம்


ADDED : மார் 05, 2024 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், தலைவர் பரிமளம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

வார்டுகளில் குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு கவுன்சிலர்கள் முறையிட்டனர். பணிகள் சரிவர மேற்கொள்ளாததால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்களிடம் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு கல்லுாரி, மீன்வள பல்கலைகழகம், ஏழு அரசு பள்ளிகள், எட்டு தனியார் பள்ளிகள் உள்ளதால், அங்கு படிக்கும் மாணவர்கள் கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்காக, 2 கோடி ரூபாயில், அறிவுசார் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு தேவையான நிலம் நகராட்சிக்கு சொந்தமாக ஏதும் இல்லாத நிலையில், பொன்னேரி அரசு கல்லுாரி வளாகத்தில், 83 சென்ட் இடத்தில் அமைக்க கருத்துரு கேட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த தெருக்களில் தார், சிமென்ட் சாலைகள் அமைப்பது, மழைநீர் கால்வாய்களை ஏற்படுத்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us