/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பருவ மழை முன்னெச்சரிக்கை பொன்னேரி நகராட்சி தீர்மானம்
/
பருவ மழை முன்னெச்சரிக்கை பொன்னேரி நகராட்சி தீர்மானம்
பருவ மழை முன்னெச்சரிக்கை பொன்னேரி நகராட்சி தீர்மானம்
பருவ மழை முன்னெச்சரிக்கை பொன்னேரி நகராட்சி தீர்மானம்
ADDED : அக் 01, 2024 07:37 AM
பொன்னேரி: பொன்னேரி நகராட்சியின்,சாதாரண கூட்டம் தலைவர் பரிமளம் தலைமையில் நடந்தது. கமிஷனர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான டீசல் மோட்டார்கள், மின்மோட்டார்கள், பைப்கள், மின்சாதன பொருட்கள், மழைநீர் உட்புகுவதை தடுக்க தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கொம்புகள் உள்ளிட்டவைகளை தயார் செய்வதற்கும், கொள்முதல் செய்வதற்கும், 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதே போன்று, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க சாலையோரங்களில் கால்வாய்கள் அமைக்கவும், வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவையான பொக்லைன் இயந்திரங்களை, வாடகை அடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் தயார் நிலையில் வைத்திருக்க, 4.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில், அனைத்து வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டிய, மழைக்கால முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்படியும் கவுன்சிலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.