/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் 8 செ.மீ., மழை பதிவு
/
பொன்னேரியில் 8 செ.மீ., மழை பதிவு
ADDED : ஜன 08, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக, பொன்னேரியில் 8.1 செ.மீட்டர் மழை பாதிவாகியது.