/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்கு மாதங்களில் சிமென்ட் சாலை சேதம் பொன்னேரி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

ADDED : ஏப் 21, 2025 11:38 PM

பொன்னேரி,
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட நீலியப்பாதுரை தெருவில் இருந்து, இரட்டைமலை சீனிவாசனார் சாலையை இணைக்கும், பழைய டி.எஸ்.பி., அலுவலக சாலையில், 100 மீ., தொலைவிற்கு, 12.40 லட்சம் ரூபாய் செலவில், நான்கு மாதங்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலை தரமின்றி அமைக்கப்பட்டதால், தற்போது ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. சிமென்ட் மணல் கலவை துாசி பறக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட சாலை, நான்கு மாதங்களில் சேதம் அடைந்திருப்பது குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில், கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே பயணிக்கின்றன. கனரக வாகனங்கள் பயணித்தால், சாலை முற்றிலும் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால், சாலையின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
அதேபோல, பலத்த மழை பெய்தால், சிமென்ட் சாலை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. சாலை பணி நடக்கும் போது, நகராட்சி பொறியாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்வதில்லை. அலுவலகத்தில் மட்டும் பணி செய்தால், எப்படி சாலைகள் தரமாக அமையும். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.