/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலை இணைப்பு பணியில் தரமில்லை பயன்பாட்டிற்கு வரும் முன்பே விரிசல்
/
நெடுஞ்சாலை இணைப்பு பணியில் தரமில்லை பயன்பாட்டிற்கு வரும் முன்பே விரிசல்
நெடுஞ்சாலை இணைப்பு பணியில் தரமில்லை பயன்பாட்டிற்கு வரும் முன்பே விரிசல்
நெடுஞ்சாலை இணைப்பு பணியில் தரமில்லை பயன்பாட்டிற்கு வரும் முன்பே விரிசல்
ADDED : ஆக 18, 2025 11:38 PM

திருவள்ளூர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை அமைக்கப்பட்டு வரும் இணைப்பு பணியில் தரமில்லாததால், பயன்பாட்டிற்கு வரும் முன்னரே சாலையோர கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து - ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி, 2011ம் ஆண்டு துவங்கியது.
அப்போது, சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இரு வழிச்சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம் .ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகே வரை இணைக்கும் பணி, ஏழு ஆண்டுகளாக முடங்கியது.
இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ள வழியில், ஊத்துக்கோட்டை சாலை - ஐ.சி.எம்.ஆர்., அருகே மற்றும் தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட திருநின்றவூர் வரை ஏழு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும் வகை யில் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து திருநின்றவூர் வரை, சாலையோர பக்கவாட்டு பகுதியில், கான்கிரீட் அமைக்கப்பட்டு வருகிறது.
செங்குன்றம் சாலையில் இருந்து திருவள்ளூர் வரை, சவுடு மண் எடுக்க வரும் கனரக வாகனங்கள், அந்த வழியாக வந்து செல்கின்றன.
இதனால், சாலையோர பக்கவாட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் கான்கிரீட் முற்றிலும் பெயர்ந்து, உள்ளிருக்கும் மண் தடுப்பு வெளியில் தெரிகிறது.
சாலை பணி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும் முன்னரே கான்கிரீட் பெயர்ந்து வரும் வகையில், தரமில்லாமல் சாலை அமைக்கப்பட்டு வருவ தாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.