/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
/
பொன்னேரி சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
பொன்னேரி சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
பொன்னேரி சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ADDED : ஜூன் 09, 2025 11:44 PM

பொன்னேரி, பொன்னேரி நகரத்திற்கு உட்பட்ட, திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை, பழவேற்காடு சாலை, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்டம், மின்கேபிள் பதிப்பு, இணையதள கேபிள் பதிப்பு பணிகளுக்காக, கடந்த ஓராண்டாக சாலைகள் தோண்டப்படுவதும், அரைகுறையாக மூடப்படுவதும் தொடர்கிறது.
இதனால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கின்றன. வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.
பழவேற்காடு சாலையில் உள்ள பஜாரில் சாலை ஒரு அடி உள்வாங்கியும், பெரிய ஓட்டைகள் விழுந்தும் இருக்கிறது.
ஓட்டைகளில் வியாபாரிகள் பிளாஸ்டிக் டப்பாக்களை போட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்து வைத்து உள்ளனர்.
இதே சாலையில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக அதிகாரிகளும், ஊழியர்களும் சென்று வருகின்றனர். ஆனாலும், கடந்த, 10 நாட்களாக, பள்ளத்தை சீரமைக்க வில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.