/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலைய சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
ரயில் நிலைய சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ரயில் நிலைய சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ரயில் நிலைய சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 23, 2024 12:41 AM

பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, வேண்பாக்கம் வழியாக திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை அடைவதற்கு, ரயில் நிலைய சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக வேண்பாக்கம், திருவேங்கிடபுரம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணியர் ரயில் நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், வேண்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில், மழைநீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே சிறிய கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டது.
கால்வாய் அமைத்த பின், சாலையை சரிவர சீரமைக்காமல் விடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மேடு பள்ளமாகவும், சகதியாகவும் மாறி உள்ளது.
ரயில் நிலையத்திற்கு சென்று பயணிர் மற்றும் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில் அந்த பள்ளங்களில் சிக்கி விழுகின்றனர்.
ஆட்டோ, கார் உள்ளிட்டவை சாலையை பயன்படுத்த முடியாமல், தாலுக்கா அலுவலக சாலை வழியாக, 2 கி.மீ., சுற்றிக்கொண்டு பயணிக்கின்றன.
மேற்கண்ட பகுதியில் சாலையை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.