sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்திருட்டு:4 பேரிடம் அபராதம் வசூல்

/

மின்திருட்டு:4 பேரிடம் அபராதம் வசூல்

மின்திருட்டு:4 பேரிடம் அபராதம் வசூல்

மின்திருட்டு:4 பேரிடம் அபராதம் வசூல்


ADDED : ஜூலை 21, 2011 12:54 AM

Google News

ADDED : ஜூலை 21, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரம்பாக்கம்:ஒரு விளக்கு மின் இணைப்பு பெற்று, அதன் மூலம் பல வீடுகளுக்கு மின் சப்ளை கொடுத்து மோசடி செய்த நான்கு பேரிடம், விஜிலன்ஸ் அதிகாரிகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபாரதம் வசூலித்தனர்.கடம்பத்தூர் அடுத்த, செஞ்சி பானப்பாக்கம் கிராமத்தில், சிலர், ஒரு விளக்கு மின் இணைப்பு பெற்று, பல வீடுகளுக்கு மின்சாரம் சப்ளை செய்வதாக, காஞ்சிபுரம் மின்வாரிய விஜிலன்ஸ்அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து விஜிலன்ஸ் அதிகாரிகள், 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் இரவு, செஞ்சி பானப்பாக்கம் கிராமத்தில், திடீரென ஆய்வு நடத்தினர்.அப்போது, அக்கிராமத்தில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் மகன் செல்லத்துரை, ஒரு விளக்கு மின்சாரம் பெற்று, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடி பயன்படுத்தியது தெரிந்தது.அதே போல், அண்ணாமலை மகன் சுப்பிரமணி, 11 ஆயிரத்து 200 ரூபாயும், குப்பன் மகன் ஏழுமலை, 5,700 ரூபாயும், ராஜேஷ் மனைவி ரேவதி, 1,800 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டது தெரிய வந்தது.இவர்கள் நான்கு பேரும், நேற்று கடம்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை செலுத்தி, ரசீது பெற்றுக் கொண்டனர்.இது போல் அரசு சலுகை பெற்று, மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, விஜிலன்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us