UPDATED : ஜூலை 26, 2026 08:55 PM
ADDED : ஜூலை 26, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி தாலுகாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது உறவினரான கட்டட மேஸ்திரி, சில நாட்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்துள்ளார். பின், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, திருத்தணி மகளிர் போலீசார் கட்டட மேஸ்திரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
