/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'இ-சேவை' மையங்களில் பழகுனர் உரிமம் பெறலாம்
/
'இ-சேவை' மையங்களில் பழகுனர் உரிமம் பெறலாம்
ADDED : மார் 17, 2024 12:33 AM
திருவள்ளூர்:ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெற, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தற்போது வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமம் பெற ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் 'இணைய தள' மையங்களையும் பொதுமக்கள் அணுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு ஏற்படுகிறது.
இம்முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்ப்பதற்காகவும், எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக, பழகுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை, இம்மாதம் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பொதுமக்கள், தங்களுக்கு அருகாமையிலுள்ள இ- சேவை மையங்களில், விண்ணப்பித்து, ஒப்புதல் அளிக்கப்பட்ட, பழகுனர் உரிமத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தொடர்ந்து மோட்டார் வாகன துறை வாயிலாக, பெறக்கூடிய இதர சேவைகளான, ஓட்டுனர் உரிமம், 'பர்மிட்' போன்ற சேவைகளையும், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

