/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பருவ மழை முன் எச்சரிக்கை மணல் மூட்டைகள் சேதம்
/
பருவ மழை முன் எச்சரிக்கை மணல் மூட்டைகள் சேதம்
ADDED : செப் 25, 2024 12:57 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகளில் , 38 ஏரிகளை ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வருகின்றனர். ஏரிகளின் கரைகள் பலப்படுத்துவது, மதகு மற்றும் நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது, ஏரிகளில் தேங்கும் தண்ணீர் வீணாகாமல் பாதுகாப்பதற்காக ஒன்றிய நிர்வாகம் கண்காணித்தும், கரை உடைப்பு, கடைவாசல் சேதம், மதகு தேசம் ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாகஅடைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய நிர்வாகம் மணல் மூட்டைகள் பருவ மழைக்கு முன்னதாக தயாரித்து இருப்பில் வைக்கப்படும்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒன்றிய நிர்வாகம் எம்சாண்ட் கோணிப்பைகளில் நிரப்பி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைத்துள்ளன. தற்போது எம்சாண்ட் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன. இங்குள்ள, 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன.
இதனால் அடுத்த மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவ மழையால் ஏரிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் அதை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடித்து மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
மணல் மூட்டைகள் தயார்
நீர் வளத்துறை சார்பில், ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கவரைப்பேட்டையில் இயங்கி வரும் நீர் வளத்துறையின் லட்சுமிபுரம் அணைக்கட்டு பிரிவுக்கு உட்பட்ட ஆரணி ஆறு மற்றும் ஏரிகளின் கரைகள் அனைத்தும் வலுவான நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து வருகின்றனர்.
கரைகளில் உடைப்பு ஏற்பட நேரிட்டால் உடைப்பை அடைக்க, முக்கிய இடங்களில் மணல் மூட்டை வைக்கப்பட்டு வருகிறது. ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு பகுதியில், 1,200 மணல் மூட்டைகள், அரியதுறையில், 400 மணல் மூட்டைகள், கவரைப்பேட்டை அலுவலக வளாகத்தில், 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 500 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக உதவி பொறியாளர் கண்ணன் தெரிவித்தார்.