/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவர் பற்றாக்குறையால் திருமழிசையில் கர்ப்பிணியர் அவதி
/
அரசு மருத்துவர் பற்றாக்குறையால் திருமழிசையில் கர்ப்பிணியர் அவதி
அரசு மருத்துவர் பற்றாக்குறையால் திருமழிசையில் கர்ப்பிணியர் அவதி
அரசு மருத்துவர் பற்றாக்குறையால் திருமழிசையில் கர்ப்பிணியர் அவதி
ADDED : ஜன 20, 2025 11:51 PM

திருமழிசை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை. இங்குள்ள பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, 2014ம் ஆண்டு முதல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்னும் நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையை, திருமழிசை, வெள்ளவேடு, பிரையாம்பத்து, காவல்சேரி, மேல்மணம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட ஆரம்ப பொதுமக்கள் அடிப்படை மருத்துவ சேவைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில், ஆண், பெண் என இரு மருத்துவர்கள் மற்றும் மூன்று செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், தற்போது ஒரு பெண் மருத்துவர் மற்றும் மூன்று செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு, காலை 8-:00 மணிக்கு கர்ப்பிணியர் சிகிச்சை மேற்கொள்ள வந்தால், வெகுநேரம் காத்திருந்து, மதியம் 1:00 மணிக்குதான் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பணியில் இருக்கும் பெண் மருத்துவர் மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்கிறார்.
பின், மதியம் 1:00 மணிக்குதான் கர்ப்பிணியருக்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர். செவிலியர்களும் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள், திருமழிசை அரசு நலவாழ்வு மையத்தில் கூடுதல் மருத்துவரை நியமிக்கவும், செவிலியர்களை பணிக்கு நேரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

