/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
/
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
ADDED : ஜன 22, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு:பழவேற்காடு பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரியை சேர்ந்த, 21 வயது இளைஞருக்கும், இன்று காவல்பட்டி கிராமத்தில் உள்ள அம்மன்கோவிலில், திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இது குறித்து சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது. நேற்று சமூகநலத்துறை மற்றும் காவல் துறையினர் சிறுமியின் வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் விசாரணை நடத்தி, திருமணத்தை நிறுத்தினர்.