நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்
திருவள்ளூர் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன், 65. இவர், திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயண பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 7ம் தேதி காலை, ரயில் நிலையம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, இவரது மகன் குருகார்த்திக், நேற்று முன்தினம் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

