ADDED : ஜன 26, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:புழல் மத்திய சிறைத் துறை வாகனம், வரும் பிப்.13ல் ஏலம் விடப்பட உள்ளது.
மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சிறை 2ல் டி.சி.எம்., தாவோக் வாகனம், பிப்.13ல் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், 500 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த அறிவிப்பு பெற்ற 10 நாட்களுக்குள் ஏல தொகையினை வரி உட்பட செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், வாகனத்தை இச்சிறையில் அலுவலக நாட்களில், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை கண்காணிப்பாளரின் முன் அனுமதி பெற்று பார்வையிட்டு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

