/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிஸ்கட்டில் கஞ்சா சிக்கிய கைதிகள்
/
பிஸ்கட்டில் கஞ்சா சிக்கிய கைதிகள்
ADDED : மார் 17, 2024 01:08 AM
புழல்:புழல் சிறையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, நேற்று முன்தினம் பல்வேறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, எட்டு கைதிகள் சென்றனர். விசாரணை முடிந்து, மீண்டும் மாலை சிறைக்கு திரும்பினர்.
அதில், சில கைதிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, சிறை போலீசார் அவர்கள் வைத்திருந்த, பிஸ்கட் பாக்கெட்டுகளை சோதனையிட்டனர். அதில், பிஸ்கட்டுகளின் நடுவில், சிறிது சிறிதாக, 50 கிராம் கஞ்சா சிக்கியது. விசாரணையில், புளியந்தோப்பைச் சேர்ந்த சாரதி, 25, என்பவர், தன் நண்பரான கார்த்திக், 26, என்பவருக்கு, நீதிமன்றம் அருகே கொடுத்தது தெரிந்தது.
இது குறித்து, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார், கார்த்திக்கின் சிறை கூட்டாளிகளான கோபிநாத், 23, முபஷீர் அகமது, 25, மற்றும் கஞ்சா கொடுத்த சாரதி உட்பட, நால்வர் மீதும் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

