/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் கல்லுாரி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து
/
தனியார் கல்லுாரி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து
தனியார் கல்லுாரி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து
தனியார் கல்லுாரி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து
ADDED : ஜூலை 12, 2025 11:46 PM
சோழவரம்:தனியார் கல்லுாரி பேருந்துகள் ஒன்றையொன்று முந்தி செல்லும்போது உரசியதால், மாணவர்கள் காயம் அடைந்தனர்.
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் தனியார் பொறியியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை, இரண்டு கல்லுாரி பேருந்துகள் மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரனோடை அருகே, ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றன.
அப்போது, இரண்டு பேருந்துகளும் உரசின. இதில், ஒரு பேருந்து மைய தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் மாணவர்கள் லேசான காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், பேருந்துகளின் பக்கவாட்டு மற்றும் முன்புற பகுதிகள் சேதமடைந்தன. மாணவர்கள் மாற்று பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.