/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்குகள் மோதி விபத்து தனியார் ஊழியர் உயிரிழப்பு
/
பைக்குகள் மோதி விபத்து தனியார் ஊழியர் உயிரிழப்பு
ADDED : ஏப் 07, 2025 11:56 PM

கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையைச் சேர்ந்தவர் சங்கர், 48; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டு, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஜி.என்.டி., சாலையில், கோட்டக்கரை பேருந்து நிறுத்தத்தில் திரும்ப முயன்ற போது, சாமிரெட்டிகண்டிகை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரின், 'ஜாவா' பைக் மோதியது. இருவரும், பலத்த காயமடைந்தனர்.
இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

