/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மே 16ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
மே 16ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மே 13, 2025 09:06 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து, வரும் 16ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தவுள்ளன.
இதுகுறித்து கலெக்டர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கை:
மே 16ம் தேதி, திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10:00 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

