தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தனியார் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

 தனியார் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

 தனியார் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜன 30, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை கன்வெயர் பெல்ட்டில் சிக்கிய வடமாநில தொழிலாளி, உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப், 22. இவர் கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணா புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில், வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை, தொழிற்சாலை வளாகத்தில் பணியில் இருந்த போது, கன்வெயர் பெல்ட்டில் சி க்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற சித்தராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த சிலர், தொழிற்சாலை நிர்வாகத்தின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம் எனக் கூறி தொழிற்சாலை முன் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us