தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'

 உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'

 உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'


ADDED : மார் 08, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில் உள்ள அண்ணாமலை நகரில், 'செல்வம் கிளினிக்' என்ற பெயரில் தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகம் இயங்கி வந்தது. இந்த மருத்துவமனை உரிய ஆவணங்கள் இன்றி, பாதுகாப்பற்ற சூழலில் இயங்கி வருவதாக, மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார்கள் வந்தன.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா தலைமையிலான குழுவினர் நேற்று, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தீ தடுப்பு பாதுகாப்பு உரிமம் பெறாமல், மருந்தகத்தில் பார்மசிஸ்ட் இன்றி இயங்கி வந்தது தெரிந்தது. மேலும், மூன்று படுக்கைகள் இருந்த நிலையில், அதற்குரிய பதிவு சான்று மற்றும் அடிப்படை ஆவணங்கள் ஏதுமின்றி இயங்கியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கவரைப்பேட்டை போலீசார் முன்னிலையில், மருத்துவமனை மற்றும் மருந்தகத்திற்கு, 'சீ ல்' வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us