UPDATED : அக் 26, 2026 07:51 PM
ADDED : அக் 26, 2026 07:46 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 30ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 30ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 வரை சிறு அளவிலான, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள், www.tnprivatejobs.tn.gov.inபதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
