தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி
தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி
UPDATED : மே 26, 2026 07:21 PM
ADDED : மே 26, 2026 07:12 PM

திருத்தணி:தனியார் பள்ளி ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கு, தீயணைப்பு துறையின் சார்பில், தீ தடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், திருத்தணி கோட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, தீ தடுப்பு குறித்த பயிற்சி நடந்தது.
இதில், திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு செயல்பட்டு தீயை அணைக்க வேண்டும்.
மேலும், பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கினால், காயமடைந்த மாணவர்களை எவ்வாறு மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என்பவை குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் விளக்கி கூறினார்.
மேலும், செயல்முறை விளக்கம் மற்றும் தீ தடுப்பு குறித்து, ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து, வேன் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
